வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய பிரதம செயலாளர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டனர்.
வடக்கு மாகாண பிரதம செயலாளராக இளங்கோவனும் வடமேல் மாகாண பிரதம செயலாளராக தீபிகா குணரட்னவும் நியமிக்கப்பட்டனர்.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவால் நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.