இந்தியன் வெல்ஸ்: பிரிட்டனின் எம்மா ரடுகானுவை வீழ்த்தி அரினா சபலெங்கா வெற்றி
இந்தியன் வெல்ஸில் நடந்த மூன்றாவது சுற்றில் பிரிட்டனின் எம்மா ரடுகானுவை நேர் செட்களில் வீழ்த்தி உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான அரினா சபலெங்கா வெற்றிபெற்றுள்ளார்.
உலகத் தரவரிசையில் 250 ஆவது இடத்தில் உள்ள 21 வயதான பிரிட்டனின் எம்மா ரடுகானு, 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட லாயம் காரணமாக இந்த போட்டியில் வைல்டு கார்டாக இணைந்துகொண்டார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் 6-3 7-5 என்ற நேர் செட்களில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான அரினா சபலெங்கா வெற்றிபெற்றார்.
இந்தியன் வெல்ஸுக்கு முன்பு தான் விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால் சமீபத்திய முடிவு தன்னை பாதிக்காது என பிரிட்டனின் எம்மா ரடுகானு கூறியுள்ளார்.