CBC TAMIL NEWS : முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி தொடர்பான வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.
கடந்த ஆண்டு ஆணி மாதம் 29 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட குறித்த புதைகுழியில் முதல் கட்ட அகழ்வு பணியானது அதே ஆண்டு புரட்டாசி மாதம் 6 ஆம் திகதி முதல் 11 நாட்கள் நடைபெற்று 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டது.
தொடந்து இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் கடந்த கார்த்திகை மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெற்று 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டதோடு பின்னர் அந்த பணிகளும் இடைநிறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து மூன்றாம் கட்ட அகழ்வுபணிகள் மார்ச் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவ தனது அறிக்கையை நீதிமன்றுக்கு அனுப்பியுள்ள நிலையில் குறித்த வழக்கு விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.