பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து உயர் நீதிமன்றத்தின் முடிவு

CBC TAMIL NEWS : பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகளை இணைத்துக் கொண்டால் அதனை நாடாளுமன்றில் எளிய பெரும்பான்மையோடு நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அறிவித்துள்ளார்.

நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் செயல்படுத்தப்படாவிட்டால், சட்டமூலத்தில் உள்ள பல சரத்துகள் விசேட பெரும்பான்மையாலும் ஏனைய சில பிரிவுகளுக்கு விசேட பெரும்பான்மை மற்றும் பொது வாக்கெடுப்பு தேவை என்றும் அறிவித்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கடந்த ஜனவரி 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது நிலையில் அதன் விதிகள் நீதித்துறை அதிகாரியால் முழுமையாக மதிப்பாய்வு செய்யப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடை சட்டத்திற்கு மாற்றீடாக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இதேவடிவில் நிறைவேற்றப்பட்டால், முப்படை, பொலிஸாருக்கு வரம்பற்ற அதிகாரம் வழங்கப்படும் என்றும், இது கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை மீறும் என்றும் தெரிவித்து 31 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *