ஜனக வக்கும்புரவிற்கு புதிய அமைச்சு பதவி !
CBC TAMIL NEWS : சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜனக வக்கும்புர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இந்த நியமனம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு பதவிக்கு மேலதிகமாக அவருக்கு சுற்றாடல் இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
கெஹலிய ரம்புகவெல்ல வகித்திருந்த இராஜாங்க அமைச்சு பதவியே தற்போது ஜனக வக்கும்புரவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதை அடுத்து கெஹலிய ரம்புகவெல்ல குறித்த இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது..