இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என்ற அமைச்சர் ஹரினின் கூற்று தொடர்பாக நாடாளுமன்றில் காரசார விவாதம் !

CBC TAMIL NEWS : இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்தியாவில் தெரிவித்த கருத்தானது தற்போது தென்னிலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

இந்நிலையில் அவரது இந்த கூற்று அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடா அல்லது அவரது தனிப்பட்ட கருத்தா என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய விமல் வீரவன்ச, இந்த விடயம் தொடர்பான நிலைப்பாட்டை அரசாங்கம் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என்றும் மூன்று விமான நிலையங்கள் இந்தியாவுக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்ததாக விமல் வீரவன்ச நாடாளுமன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த அரசாங்கத்தின் பிரதம கொறடாவான, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இந்த விடயம் தொடர்பாக அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.

அத்தோடு இந்த கருத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவிப்பார் எனவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார்.

இதேநேரம் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் கூற்று சமூக வலைத்தளங்களில் திரிபுபடுத்தப்பட்டுள்ளது என்றும் அவரது முழுமையான உரைய கேட்குமாறும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *