ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது T-20 போட்டியில் இலங்கை அணி 4 ஓட்டங்களினால் வெற்றிபெற்று தொடரில் 1-0என முன்னிலை வகிக்கின்றது.
ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதலாவது போட்டி இன்று தம்புள்ளை ரங்கிரிய மைதானத்தில் நடைபெறுகின்றது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ள நிலையில் இலங்கை அணி முதலில் களமிறங்கியது.
அதன்படி முதலாவது பவர்பிளேயின் 6 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 3 விக்கெட்களை இழந்து 51 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியின் ஆரமப்பதுடுப்பாட்ட வீரர் பெத்தும் நிசங்க 6 ஓட்டங்களுடனும் குஷால் மெண்டிஸ் 10 ஓட்டங்களோடும் தனஞ்செய டி சில்வா 24 ஓட்டங்களோடும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனை தொடந்து 7.2 ஆவது ஓவரில் சரித் அசலங்க 3 ஓட்டங்களோடு ஆட்டமிழந்து வெளியேற இலங்கை அணி 55 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
இதன் பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணியின் தலைவர் ஹசரங்க T20 கிரிக்கெட்டில் தனது இரண்டாவது அரைசதத்தை அடிக்க இலங்கை அணி 130 ஓட்டங்களை தாண்டியது.
இதனை தொடந்து 16 ஓவர்கள் நிறைவில் 32 பந்துகளில் 67 ஓட்டங்களை பெற்றுக்கொண்டிருந்தபோது வனிந்து ஹசரங்க ஆட்டமிழந்து வெளியேற இலங்கை அணி 146 ஓட்டங்களை பெற்றிருந்தது.
தொடந்து அடுத்தடுத்த விக்கெட்கள் பறிபோக இலங்கை அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 160 ஓட்டங்களை பெற்றது.
இதனை தொடந்து 161 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணியின் முதலாவது விக்கெட் 2.5 ஆவது ஓவரில் பறிபோனது.
அவ்வணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் குர்பாஸ் 13 ஓட்டங்களோடு மத்தியூஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனை தொடந்து குல்படின் நைப் 16 ஓட்டங்களோடு, வனிந்து ஹசரங்கவின் பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனை தொடந்து ஆடுகளம் புகுந்த அஸ்மத்துல்லா உமர்சாய் 2 ஓட்டங்களோடு மதீஷ பத்திரனவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேற ஆப்கானிஸ்தான் அணி 9 ஓவர்களில் 71 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்திருந்தது.
தொடந்து 11.2 ஆவது பந்தில் மொஹமட் நபி ஆட்டமிழந்து வெளியேற அடுத்த பந்தில் நஜிபுல்லா சத்ரான் ஆட்டமிழக்க ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்களை இழந்து 86 ஓட்டங்களை பெற்றது. இதனை தொடந்து 20 ஓவர்கள் நிறைவில் ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இதன் மூலம் இலங்கை அணி முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் 4 ஓட்டங்களினால் வெற்றிபெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 நீ முன்னிலை வகிக்கின்றது.