செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதத்தை உருவாக்கும் ரஷ்யா – அச்சத்தில் அமெரிக்கா
ரஷ்யா ஒரு விண்வெளி அடிப்படையிலான செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதத்தை உருவாக்கி வருகிறது என அமெரிக்கா அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் ரஷ்யாவின் இந்த நடவடிக்கையினால் உலக நாடுகளுக்கு உடனடி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
ரஷ்யா இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ள போதும் அந்த ஆயுதம் தற்போது செயல்படவில்லை என உளவுத்துறை அதிகாரிகளிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் ஐரோப்பாவில் உள்ள நட்பு நாடுகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன் கிர்பி கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் அது அணுசக்தி திறன் கொண்டதோ அல்லது அணுசக்தியால் இயங்கக்கூடியது என்றோ அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து அவர் கருத்து தெரிவிக்கவில்லை.