இணைய பாதுகாப்பு சட்டம் குறித்து ஜனாதிபதியிடம் கவலை வெளியிட்டது அமெரிக்கா!

CBC TAMIL NEWS : சர்ச்சைக்குரிய இணைய பாதுகாப்பு சட்டம் கருத்துச் சுதந்திரம் மற்றும் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் முதலீடு செய்வது தொடர்பான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவோடு இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே, சமந்தா பவர் இதனை தெரிவித்துள்ளார். அத்தோடு பொருளாதார சவால்களை எதிர்கொள்வதில் இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.