CBC TAMIL NEWS : இணைய பாதுகாப்புச் சட்டத்தின் இலக்கம் 9 இன் சான்றிதழை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
சபாநாயகரால் சான்றளிக்கப்பட்டதாக கூறப்படும் சட்டம், அரசியலமைப்பு விதிகளை மீறி இயற்றப்பட்டதாக தெரிவித்தே எம்.ஏ.சுமந்திரன் அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் இருந்தபோதிலும், சட்டத்தின் விதிகள் தேவையான திருத்தங்களுடன் இணங்கத் தவறியதை அடுத்தே சுமந்திரன் அதன் சட்டபூர்வமான தன்மையை சவால் செய்துள்ளார்.
அதன்படி சட்டமா அட்ர்ய்ப்பரின் ஆலோசனையின் அடிப்படையில் கூறப்படும் சபாநாயகரின் சான்றிதழ் செல்லுபடியாகாதது மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.