முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோரினார் ஞானசார தேரர் !

CBC TAMIL NEWS : 8 வருடங்களுக்கு முன்னர் தான் வெளியிட்ட கருத்துக்காக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

குரகல விகாரை தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களால் தான், மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்புக் கோருவதாக தெரிவித்துள்ளார்.

நீதவான் முன்னிலையில் ஞானசார தேரர் இதனை அறிவித்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பை மார்ச் 28 ஆம் திகதி வழங்குவதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி அவர் வெளியிட்ட கருத்து மத மற்றும் இன ஒற்றுமையை சீர்குலைத்ததாக தெரிவித்து சட்டமா அதிபரால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.