தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த தடை உத்தரவு : நீதிமன்றில் முன்னிலையாகத்தாயார் – சுமந்திரன்

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு எதிராக நீதிமன்றில் முன்னிலையாக தயார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் நேற்று மதியம் தடையுத்தரவு விதித்துள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது.

இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றமும் இடைக்கால தடைவிதித்திருந்தது.

இந்நிலையில் கட்சியின் தலைமை தன்னிடம் கோரிக்கை முன்வைக்கும் பட்சத்தில் குறித்த வழக்கில் மின்நிலையகி வாதாட தயார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.