CBC TAMIL NEWS : பல்வேறு தரப்பினரும் சமர்ப்பித்த முன்மொழிவுகளின் அடிப்படையில் இணைய பாதுகாப்புச் சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பொதுப் பாதுகாப்பு அமைச்சரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவின்படி, இந்த சட்டத்தை திருத்துவதற்கான வரைபை மேற்கொள்ள சட்ட வரைவாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணைய பாதுகாப்புச் சட்டம், பேச்சு சுதந்திரத்தை முடக்கும் என எதிர்க்கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டிய போதும் ஜனவரி 24 அன்று திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இணைய பாதுகாப்புச் சட்டம், நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு இணங்காதமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலைகளை எழுப்பியுள்ளது.