உலக பொருளாதாரம் ஒரு மென்மையான இறக்கத்தை சந்திக்கும்

பல தசாப்தங்களாக நிலவும் கடுமையான வட்டி விகித உயர்வுகளுக்குப் பின்னர் உலக பொருளாதாரம் ஒரு மென்மையான இறக்கத்தை சந்திக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

டுபாயில் இன்று நடைபெற்ற உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்பிரகாரம் வட்டி விகிதங்கள் ஆண்டின் நடுப்பகுதியில் குறையத் தொடங்கும் என்றும் இதற்காக உலகப் பொருளாதாரம் தயாராக இருக்கின்றது என்பதில் தாம் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொரோனா தொற்றுக்கு பின்னர் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நீடித்தால் உலகப் பொருளாதாரங்களை பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதேநேரம் செங்கடலில் கப்பல்கள் மீதான சமீபத்திய தாக்குதல்களால் ஏற்படும் விளைவுகளும் ஒட்டுமொத்த உலகிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எச்சரித்துள்ளார்.