அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது.
இதனை அடுத்து 70 வயதான லொயிட் ஒஸ்டினின் அலுவலகத்தின் செயற்பாடுகள் மற்றும் கடமைகள் துணை பாதுகாப்பு செயலாளர் Kathleen Hicks க்கு வழங்கப்பட்டுள்ளதாக பெண்டகன் கூறியுள்ளது.
ஒரு மாதத்தில் இரண்டாவது தடவையாக லொயிட் ஒஸ்டின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிப்படைத்தன்மை குறித்த விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டினை பணிநீக்கம் செய்வதற்கான கோரிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிராகரித்துள்ளார்.
ஈராக்கில் அமெரிக்க துருப்புக்களை வழிநடத்திய லொயிட் ஒஸ்டின், தனது உடல்நலப் பிரச்சினைகள் குறித்து வெளிப்படைத்தன்மையுடன் செயற்படாதமைக்கு பகிரங்க மன்னிப்பும் கோரியிருந்தார்.
இதேநேரம் உக்ரைனுக்கு இராணுவ ஆதரவை ஒருங்கிணைக்க நிறுவப்பட்ட கூட்டணியின் மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில் அதில் அவர் பங்கேற்பாரா இல்லையா என்ற தகவல் வெளியாகவில்லை.