இலவச விசா நடைமுறையை மார்ச் மாதத்திற்குப் பின்னும் நீடிக்க தீர்மானம்

சுற்றுலாப் பயணிகளுக்கான இலவச விசா நடைமுறையை இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பின்னும் நீடிக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை கூறியுள்ளது.

சீனா, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலவச விசா நடைமுறை கொண்டுவரப்பட்டது.

சுற்றுலாத் துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக கொண்டுவரப்பட்ட இந்த திட்டம் கடந்த நவம்பர் மாத இறுதியில் இருந்து இந்த ஆண்டு மார்ச் 31 வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த முன்னோடி திட்டத்தை அடுத்து டிசம்பரில், அனைத்து நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

இந்தியா போன்ற வளர்ந்து வரும் சுற்றுலா சந்தையை இலக்காகக் கொண்ட இந்த திட்டத்தை மேலும் நீடிக்க இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.