இந்திய விஜயத்தின் போது பிராந்திய பாதுகாப்பு குறித்து பேச்சு – தேசிய மக்கள் சக்தி

தேசிய மக்கள் சக்தியின் அண்மையில் இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தால் எதிர்க்கட்சிகள் வியப்படைந்துள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் மேலும் பல ஆச்சரியமான நிகழ்வுகள் வெளிவர உள்ளதாகவும் அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் பெண்கள் மாநாட்டின் கருத்தாக்கம் குறித்தும் எதிர்க்கட்சிகள் வியப்படைந்துள்ளதாகத் தெரிவித்த அனுரகுமார திஸாநாயக்க, பெண்களின் விழிப்புணர்ச்சி இந்த முறையில் ஏற்படும் என்று அவர்கள் ஒருபோதும் நினைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

தேசிய மக்கள் முன்னணியின் வெற்றிக்கு எதிராக பல்வேறு கூட்டணிகள் ஒன்றிணைந்து களமிறங்குவதாக தெரிவித்துள்ள அமைச்சர், இதற்காக மகிந்த-சந்திரிகா, மைத்திரிபால-மஹிந்த, ரணில்-சந்திரிகா போன்ற அரசியல் எதிரிகள் கூட ஒரே மேடைக்கு வரவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான தனிப்பட்ட பிரச்சினையின் காரணமாக சஜித் பிரேமதாச அவர்களோடு இணையவில்லை என்றும் இல்லையெனில் அவரும் இந்த கூட்டணியில் இணைந்திருப்பார் என்றும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேநேரம் இந்திய அரசாங்கத்துடனான தமது கலந்துரையாடலில் பிராந்திய பாதுகாப்பு குறித்தே விசேட கவனம் செலுத்தப்பட்டதாக தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.