உலக சாதனை படைத்த கென்யா வீரர் கார் விபத்தில் உயிரிழப்பு

மாரதன் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைத்த கென்யாவின் கெல்வின் கிப்டம் கார் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.

கென்யாவில் நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 24 வயதான அவர் உயிரிழந்த சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வேக கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளாக்கியது என்றும் அவரோடு சென்ற பயிற்சியாளர் ஒருவரும் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓக்டோபரில் சிகாகோவில் நடந்த மாரதன் ஓட்டப்போட்டியில் 2 மணிநேரம் 35 செக்கன்களில் நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை கடந்து கெல்வின் கிப்டம் உலக சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில் பாரிஸில் நடைபெறவிருக்கும் கோடைக்கால ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் முனைப்போடு அவர் பயிற்சிபெற்றுவந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.