கண்டி தேசிய வைத்தியசாலையில் உள்ள இருதய சிகிச்சைப் பிரிவு ஒன்று செயலிழந்துள்ளதால்; 8,000 இதய நோயாளிகள் சிகிச்சைக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் உள்ள இரண்டு இயந்திரங்களில் ஒன்று பழுதடைந்துள்ளதால் நோயாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.
அத்தோடு நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் நோயறிதலுக்குத் தேவையான பெருமளவிலான இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதாக அதன் இணை அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.
இதேநேரம் பழுதடைந்துள்ள இயந்திரங்களை திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் ஏனைய இயந்திரங்களும் தற்போது பழுதுபார்க்கப்பட்டு வருவதாகவும் பிரதி சுகாதார பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.