பல தரப்பினரதும் கவலைகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட இணைய பாதுகாப்பு சட்டமூலத்தின் முன்னேற்றத்தை உன்னிப்பாக கண்காணிப்போம் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
சிவில் சமூகம், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட தரப்பினரின் கவலைகளுக்கு மத்தியில் இணைய பாதுகாப்பு சட்டம் கடந்த 24 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் பேசிய போதே பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் ஆன் மேரி ட்ரெவெல்யன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கருத்துச் சுதந்திரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இந்தச் சட்டத்தின் தாக்கம் குறித்து பிரித்தானியா பலதடவைகள் கவலைகளை எழுப்பியது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக ஒக்டோபரில் தானும் தெற்காசிய இராஜாங்க அமைச்சர் தாரிக் அஹ்மட்டும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தபோது இதனை வலியுறுத்தியிருந்ததாக ஆன் மேரி ட்ரெவெல்யன் கூறியுள்ளார்.