ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று திறந்து வைத்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை வெளியிட்டு உரையாற்றி வருகின்றார்.
ஜனாதிபதி அரசாங்க கொள்கை அறிக்கையை சமர்ப்பித்து முடிந்ததை அடுத்து நாடாளுமன்றம் நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்படும்.
நாடாளுமன்றம் இன்று ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இராஜதந்திரிகள் உட்பட அழைப்பாளர்களுக்கு தேநீர் விருந்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.