வேட்பாளர்களின் அலுவலகங்களை குறிவைத்து பாகிஸ்தானில் குண்டுத்தாக்குதல் – 22 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் உள்ள வேட்பாளர்களின் அலுவலகங்களுக்கு அருகே இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ள அதேநேரம் 40 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக அதிகரித்து வரும் தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டதற்கு மத்தியில் தேர்தல் நடைபெறவுள்ளது.

இன்று பிஷின் மாவட்டத்தில் உள்ள ஒரு சுயேச்சை வேட்பாளர் அலுவலகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

இதேநேரம் முன்னர் தீவிரவாத தாக்குதல்களுக்கு இலக்கான மதவாதக் கட்சியான ஜமியத் உலமா இஸ்லாத்தின் அலுவலகத்திற்கு அருகில் குண்டு வெடிப்பு நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.