கச்சத்தீவு பெருதிருவிழா எதிர்வரும் 23ஆம் திகதி மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை இலங்கை கடற்படையினர் முழுவீச்சில் முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ் மறைமாவட்ட ஆயர் அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் பிரதான ஆராதனை நடைபெறவுள்ள நிலையில் பக்தர்களுக்கான வசதிகளை கடற்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதிகள், தற்காலிக தங்குமிடங்கள், இறங்குதுறைகள் மற்றும் மின்சார விநியோகத்தை உறுதி செய்தல் போன்ற வேலைகளை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
திருவிழாவிற்கு செல்லும் இலங்கை பக்தர்களுக்காக படகு சேவைகள் குறிகாட்டுவான் மற்றும் நெடுந்தீவு இறங்குதுறையில் இருந்து இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.