ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு புனிதர் பட்டம் அளிக்கும் பணியை தொடங்கியது கத்தோலிக்க திருச்சபை

2019 ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான விசுவாசிகளுக்கு புனிதர் பட்டம் அளிக்கும் செயன்முறையை இலங்கையின் கொழும்பு பேராயர் அலுவலகம் தொடங்கவுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை “விசுவாச தியாகிகள்” என்று அறிவிக்குமாறு வத்திக்கானில் மனுவொன்றை சமர்ப்பிக்க பேராயர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல்கள் நடந்து சரியாக ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஏப்ரல் 21 என்று திட்டமிட்டுள்ளதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் பிரதிநிதியான அருட்தந்தை ஜோய் இந்திக பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பொறுப்பானவர்கள் பற்றிய தகவல்களை மறைக்க அரசாங்கம் இன்னும் தன்னால் முடிந்ததைச் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.