இஸ்ரேலுக்கும் உக்ரைனுக்கும் உதவி என 118 பில்லியன் டொலர் ஒப்பந்தம் – அமெரிக்க செனட் !

CBC TAMIL NEWS : எல்லைப் பாதுகாப்பை அதிகரிக்கும் மற்றும் இஸ்ரேலுக்கும் உக்ரைனுக்கும் போர்க்கால உதவியை வழங்கும் வகையிலும் அமெரிக்கா 118 பில்லியன் டொலர் ஒப்பந்தம் ஒன்றினை எட்ட தீர்மானித்துள்ளது.

பல மாதங்களாக குடியேற்ற பிரச்சினை மற்றும் கியிவ் ஆதரவு தொடர்பான சர்ச்சைகளுக்குப் பின்னர் குறித்த சட்டமூலத்தை விரைவாக நிறைவேற்றுமாறு ஜனாதிபதி ஜோ பய்டன் காங்கிரஸை வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைனை போர்க்கால உதவியுடன் மீண்டும் வழங்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் செனட்டில் உள்ள ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சித் தலைவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இதேநேரம் மெக்சிகோ எல்லையில் சட்டவிரோத குடியேற்றங்களைச் சமாளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள பழமைவாத குடியரசுக் கட்சி தொடந்து வலியுறுத்தி வருகின்றது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்ட சட்டமூலத்தில் உக்ரைனுக்கு 60 பில்லியன் டொலர் உதவியும் இஸ்ரேலுக்கு 14.1 பில்லியன் டொலர் இராணுவ உதவியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.