அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து யேமனில் ஹௌதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலைகள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளன.
செங்கடலில் கப்பல்களுக்கு எதிராக ஏவத் தயாராக இருந்த ஹௌதிகளின் ஏவுகணையை தாக்கியதாக அமெரிக்க மத்திய கட்டளை அறிவித்துள்ளது.
அவுஸ்ரேலியா, பஹ்ரைன், கனடா, டென்மார்க், நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்தின் ஆதரவுடன் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை கூறியுள்ளது.
சனிக்கிழமை நள்ளிரவு 13 இடங்கள் என மொத்தமாக முப்பத்தாறு இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஆதரவு நாடுகள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.
நவம்பர் நடுப்பகுதியில் இருந்து, ஹௌதிகள் காசா மீதான இஸ்ரேலின் போரை நிறுத்தும் குறிக்கோளுடன், இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
கிட்டத்தட்ட 2.3 மில்லியன் மக்கள் பட்டினியால் வாடும் காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்க இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்றும் ஹௌதிகள் கோரியுள்ளனர்.