இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பமான நிலையில் இதில் தனது முதலாவது இன்னிஸிற்காக இலங்கை அணி 439 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 410 ஓட்டங்களை குவித்து 212 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கி இலங்கை அணி 427 ஓட்டங்களை கடந்தபோது சதீர சமரவிக்ரம 27 ஓட்டங்களோடு நவீட் சத்ரானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனை தொடந்து வந்த பிரபாத் ஜெயசூர்ய 2 ஓட்டங்களோடு நவீட் சத்ரானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேற இலங்கை அணி 8 விக்கெட்களை இழந்து 435 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதனை தொடந்து சாமிக்க குணசேகர உபாதை காரணமாக போட்டியின் இடைநடுவே வெளியேற அவரை தொடந்துவந்த அசித பெர்னாண்டோ எவ்வித ஓட்டங்களை பெறாமல் ஆட்டமிழக்க இலங்கை அணி முதல் இன்னிஸிற்காக 9 விக்கெட்களை இழந்து 439 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக நவீத் சாதராண 4 விக்கெட்களையும் நிஜாத் மசூத் மற்றும் குவைசி அஹமட் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 198 ஓட்டங்களை பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.