சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்திய போராட்டம் : பொலிஸாரால் மாணவர்கள் கைது

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி, அமைதியான முறையில் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த எதிர்ப்புப் பேரணியை தடுக்க பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தி அராஜக நடவடிக்கைகளை மேற்கொண்டனர் இதனால் பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன்போது ஆளும் அரசாங்கத்தின் கொடூரமுகமாக முகம் வெளிவந்து தனது நாட்டு மாணவர்களுக்கே தடியடியினை மேற்கொண்டனர்.

மேலும் அதனை தட்டிக்கேட்ட சில ஊடகவியாளர்களுக்கும் பொலிஸார் தடியடியினை மேற்கொண்டனர் .

கொழும்பு போன்ற பிரதேசத்தில் இவ் போராட்டம் நடந்து இருந்தால் இது போன்றதொரு பொலிஸாரின் அடாவடித்தனம் நடந்து இருக்குமா என்பதே எமது ஊடகத்தின்  கேள்வி?

சுலக்‌ஷன்