ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளின் மதிய நேர இடைவேளையின் போது இலங்கை அணி 3 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களை குவித்துள்ளது,.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகின்றது.
நேற்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி எவ்வித விக்கெட் இழப்பும் இன்றி 80 ஓட்டங்களை குவிந்திருந்தது.
இந்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கி இலங்கை அணி 100 ஓட்டங்களை கடந்தபோது நிஷான் மதுஷக 37 ஓட்டங்களோடு நவீட் சத்ரானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனை தொடந்துவந்த குஷால் மெண்டிஸ் 10 ஓட்டங்களோடு நிஜாத் மசூத்தின் பந்துவீச்சில் பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்போது இலங்கை அணி 115 ஓட்டங்களை குவிந்திருந்தது.
இதேவேளை சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்ன 77 ஓட்டங்களோடு குவைசி அஹமட்டின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனை தொடந்து ஜோடி சேர்ந்த அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோரின் சிறந்த இணைப்பாட்டமும் நிதனமான துடுப்பாட்டம் காரணமாக இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்டத்தின் மதிய நேர இடைவேளையின் போது 177 ஓட்டங்களை குவித்தது.
அஞ்சலோ மத்தியூஸ் 29 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 15 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பந்துவீச்சில் ஆபிகானிஸ்தான் அணி சார்பாக நிஜாத் மசூத், குவைஸ் அஹமட் மற்றும் நவீத் சாதராண ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை சாய்த்தனர்.
இதேநேரம் தனது முதல் இன்னிஸிற்காக துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 198 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.