தேநீர் இடைவேளையில் இரு விக்கெட்டுகளை இழந்தது இலங்கை அணி

CBC TAMIL NEWS : இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தற்போது நடைபெற்றுவருகின்றது.

இதன்படி தற்போது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, முதல்பாதியின் தேநீர் இடைவேளையின் போது, 2 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பாக அஞ்சலோ மத்தியூஸ் 3 ஓட்டங்களுடனும் திமுத் கருணாரத்ன 65 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில், நிஜாத் மசூத் மற்றும் ஸியா உர் ரஹ்மான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *