இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் முதலாவது நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 80 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இன்று ஆரம்பமான போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி, ஆப்கானிஸ்தான் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தது.
அதன்படி, முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ராமட் ஷா அதிகபட்சமாக 91 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க பந்துவீச்சில் விஷ்வ பெர்ணான்டோ 4 விக்கெட்டுக்களையும், பிரபாத் ஜயசூரிய மற்றும் அசித பெர்ணான்டோ அகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்நிலையில் பதிலுக்கு தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக திமுத் கருணாரத்ன 42 ஓட்டங்களுடனும் மற்றும் நிஷான் மதுஷங்க 36 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.