எரிவாயுவின் விலைகளை அதிகரிக்கப் போவதில்லை !!

பொதுமக்கள் எதிர்நோக்கும் நிதி நெருக்கடிகளை கருத்திற்கொண்டு எரிவாயுவின் விலைகளை அதிகரிக்கப் போவதில்லை என லிட்ரோ எரிவாயு மற்றும் லாப்ஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

உலக சந்தையில் நிலவும் விலை உயர்வுக்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விலைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றாலும் அதனை மேற்கொள்ளாதிருக்க இரு நிறுவங்களும் முடிவு செய்துள்ளன.

ஜனவரியில் அறிவிக்கப்பட்ட விலை உயர்வை அடுத்து லிட்ரோ எரிவாயு 12.5 கிலோ சிலிண்டர் 4,250 ரூபாயாகவும் 5 கிலோ 1,707 ரூபாயாகவும் 2.3 கிலோ 795 ரூபாயாகவும் உள்ளது.

இதேநேரம் லாப்ஸ் நிறுவனத்தின் 12.5 கிலோ சிலிண்டர் 4,740 ரூபாயாகவும் 5 கிலோ சிலிண்டர் 1,900 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.