இலங்கைக்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க உலக வங்கி இணங்கியுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக முதற்கட்டமாக 400 மில்லியன் டொலர்கள் வழங்கப்படும் என உலக வங்கியின் மாலைதீவு மற்றும் இலங்கைக்கான முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் இலங்கைக்கான உலக வங்கி பிரதிநிதிக்கும் இடையில் இன்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.