பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து திடீரென ஒரு பெண் அரை நிர்வாணமாக புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

கடந்த சில மாதங்களாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் பிரான்ஸின் கேன்ஸ் நகரில் நடைபெற்று வரும் திரைப்பட விழாவில் சிவப்புக்கம்பள பகுதிக்குள் உக்ரைன் நாட்டுக் கொடியை தனது உடலில் வரைந்த பெண் ஒருவர் திடீரென நுழைந்து ஆடைகளைக் களைந்து போருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினார்

இதனையடுத்து அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு தங்களது கோட்டுக்களை கழட்டி அந்த பெண்ணின் உடலை மூடி அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் கேன்ஸ் திரைப்பட விழாவில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap