எடை இழப்புக்கு கருப்பு மிளகு: இந்நாட்களில் உடல் எடையை குறைக்க பலரும் பல வித முயற்சிகளை மேற்கொள்கின்றனர். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு கருப்பு மிளகு ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

கருப்பு மிளகு உடல் எடையை குறைக்க உதவுகிறது என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இதை நாம் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கருப்பு மிளகு தேநீர் உடல் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது.

உணவின் சுவையை அதிகரிக்க கருப்பு மிளகு பயன்படுத்தப்படுகிறது. அதாவது, வேகமாக உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், உடனே கருப்பு மிளகை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கருப்பு மிளகு எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றைக் குணப்படுத்துவதுடன், இதனை உட்கொள்வதால் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கிறது.

கருப்பு மிளகு ஆரோக்கியமான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் உணவு நார்ச்சத்து ஆகியவற்றைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கருப்பு மிளகில் கலோரிகள் மிகவும் குறைவு.

இது தவிர, இதில் பைபரின் எனப்படும் ஒரு மிகச்சிறந்த மூலப்பொருள் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.

உடல் எடையை குறைக்க கருப்பு மிளகாயை இப்படி பயன்படுத்துங்கள்

  • கருப்பு மிளகு தேநீர் தயாரித்து அதை உட்கொள்ளலாம். இதன் மூலம் கண்டிப்பாக உடல் எடை குறையும். கருப்பு மிளகை பயன்படுத்த இது எளிதான வழியாகும்.
  • கருப்பு மிளகு தேநீரில் நீங்கள் இஞ்சி, தேன், துளசி, இலவங்கப்பட்டை, எலுமிச்சை மற்றும் பச்சை தேயிலை பைகளை சேர்க்கலாம்.
  • இது தவிர, நீங்கள் எந்த காய்களை கொண்டு கூட்டு, கறி போன்ற பதார்த்தங்களை செய்யும்போது அதில் சற்று அதிகமாக கருப்பு மிளகை முழுதாகவோ, உடைத்தோ அல்லது பொடி செய்தோ சேர்க்கலாம்.
  • ரசம் செய்யும்போது அதில் சற்று அதிகமாக மிளகு சேர்த்து செய்தால், சளி, ஜலதோஷம், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்க்கு தீர்வு கிடைக்கும்.

கருப்பு மிளகை எந்த நேரத்தில் உட்கொள்ள வேண்டும்?

  • கருப்பு மிளகு தேநீர் மற்றும் கருப்பு மிளகு எண்ணெயை காலை உணவுக்கு முன் உட்கொள்ள வேண்டும். இதன் மூலம் அதிக பலன்களைப் பெறுவீர்கள்.
  • இது தவிர, நீங்கள் கருப்பு மிளகை நேரடியாக சாப்பிட நினைத்தால், காலையில் அதை உங்கள் டிடாக்ஸ் பானத்திற்கு பின்னும் காலை உணவுக்குப் பின்னும் சாப்பிடுங்கள்.
  • கருப்பு மிளகு சேர்த்து ஒரு கிளாஸ் பழச்சாறும் குடிக்கலாம். இதனால் உடல் எடையும் குறையும்.
  • இரவு தூங்கும் முன், பாலில் மஞ்சள் பொடி, கருப்பு மிளகு பொடி சேர்த்து சாப்பிடலாம்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap