கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு இன்று இரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை 7 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
எத்துல் கோட்டே, புறக்கோட்டை, பெத்தகன, மிரிஹான, மடிவெல, தலபத்பிட்டிய, உடஹமுல்ல, அம்புல்தெனிய, பகொட முதல் விஜேராம சந்தி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நுகேகொட சந்தியில் இருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையிலான சகல வீதிகளுக்கும் நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று இரவு 9 மணி முதல் நாளை காலை 6 மணி வரை 9 மணித்தியாலங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு 1, 2, 3, 4, 7, 8, 9, 10, 11 மற்றும் கடுவெல ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.