ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று (02) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்தவர்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளது.
இதேவேளை இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு இணங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
இந்நிலையில் அரசாங்கத்திடம் இருந்து விலக்கிக் கொண்ட உறுப்பினர்களையும் இணைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.