மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜ் கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கின்றன.

இப்படத்தின் டீஸரும், க்ளிம்ப்ஸும் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. லோகேஷ் கனகராஜ் கமல் ஹாசனின் ரசிகர் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 3ஆம் திகதி ரிலீஸ் ஆக இருக்கிறது. விக்ரம் படத்தில் கமலுக்கென்று ஃப்ளாஷ்பேக் இருக்கிறது.

இந்த ஃப்ளாஷ்பேக் காட்சி ஏற்கனவே கமல் நடிப்பில் வந்த விக்ரம் பட கதாபாத்திரத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது அதனை மீண்டும் ரசிகர்களுக்கு நினைவுப்படுத்துவ்ம் விதமாகவோ இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் விக்ரம் படத்தின் ஆடியோவும், ட்ரெய்லரும் மே மாதம் 15ஆம் திகதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உத்தியோகர்ப்பூர்வ அறிவிப்பை ராஜ்கமல் நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

அதனை லோகேஷ் கனகராஜும் ரீ ட்வீட் செய்திருக்கிறது. இந்த அறிவிப்பு கமல் ஹாசனின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap