எட்டு புதிய அமைச்சர்களுக்கான நியமனங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (23) காலை வழங்கப்பட்டது.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக விதுர விக்கிரமநாயக்க பதவியேற்றுக்கொண்டார்.