ஆர் ஜே பாலாஜி நடித்த ’வீட்ல விசேஷம்’ என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த டிரைலர் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

‘எல்.கே.ஜி’ மற்றும் ’மூக்குத்தி அம்மன்’ ஆகிய இரண்டு வெற்றி படங்களை அடுத்து ஆர்ஜே பாலாஜி நடித்த திரைப்படம் ’வீட்ல விசேஷம்’.

ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான பதாய் ஹோ’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார் .

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஜூன் 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

சத்யராஜ் மனைவி ஊர்வசி திடீரென கர்ப்பம் ஆனதை அடுத்து அந்த குடும்பத்திற்கு ஏற்பட்ட தர்மசங்கடத்தை நகைச்சுவையுடன் கூறியிருக்கும் படம் தான் ’வீட்ல விசேஷம்’ என்பது குறிப்பிடத்தக்கது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap