நாட்டின் பொருளாதார நலனுக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுக்கும் தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்குவதாக சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.
ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த 10 கட்சிகளின் உறுப்பினர்களே இதனை அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த கட்சிகளின் தலைவர்களான வாசுதேவ நாணயக்கார உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச ஆகியோர் நேற்று ஒன்றுகூடி இந்த முடிவை எடுத்துள்ளனர்.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பத்து கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று காலை இடம்பெறவுள்ளது.