இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்கிற்கும் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையில் இன்று (14) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று பிற்பகல் இந்த இந்த சந்திப்பு இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.