கடன்களை மீளச் செலுத்த முடியாத நிலை ஏற்படும் பட்சத்தில் விரைவாக செலுத்துவதற்கு ஒரு மில்லியன் கூட தற்போது கைவசமில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கடன் நிலைமை முறிவடையும் நிலை தொடர்பிலான முழுமையான அறிக்கையை எதிர்வரும் வாரம் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன் என்றும் அவர் கூறினார்.

பல ஆவணங்களின் உள்ளடக்கம் தவறாக உள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (18) நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார்.

கடன்களை செலுத்த முடியாத நிலையை நாடு அடைந்துள்ளது என்றும் எதிர்வரும் 12 மாத காலத்துக்குள் 5 அரை பில்லியன் கடன்களை மீளச் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.

அத்துடன் மேலதிகமாக 3 பில்லியின் செலுத்த வேண்டியுள்ளது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap