உக்ரைன் போர் காரணமாக வாழ்க்கைத் துணை விசா நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி ஆறு மாதங்களாக தங்கள் துணையை பார்க்கவில்லை என்றும் ஒருசிலர் 3 மாதங்களுக்கு முன்னரே இது குறித்து அறிவித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
உக்ரேனியர்களுக்கான விசாவிற்கு முன்னுரிமை அளித்து வருவதால் ஸ்டுடென்ட், வேலை மற்றும் குடும்ப விசா விண்ணப்பங்களுக்கு பதிலளிக்க நீண்ட காலம் எடுத்துள்ளது என அதிகாரி ஒருவர் பிபிசிக்கு தெரிவித்தார்.
மார்ச் 26 அன்று, உக்ரைனில் மனிதாபிமான நெருக்கடி காரணமாக, விசா விண்ணப்பங்கள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அலுவலகத்திலிருந்து கடிதம் அனுப்பட்டதாக சிலர் கூறுகின்றனர்.
மேலும் இந்த வாழ்க்கைத் துணை விசா நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தாமதம் வெளிநாடுகளில் திருமணத்தை முடித்துக்கொண்டவர்களுக்கு (தமிழர்களுக்கும்) பெரும் சுமையாக அமைந்துள்ளது.