கடந்த 06 நாட்களாக விறகு தேடச் சென்ற இரண்டு யுவதிகளை காணவில்லை என அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு காணாமல் போனவர்கள் அதே பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய சிவக்குமார் ரூபிகா என்றும் மற்றவர் 18 வயதுடைய சிவலிங்கம் ஸ்ரீதேவி என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2ஆம் திகதி காலை 11 மணியளவில் வீட்டில் இருந்து விறகு சேர்க்க சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த யுவதிகள் தொடர்பான தகவல்கள் இதுவரை கிடைக்காத காரணத்தினால் தோட்டத்தில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து வேலைக்கு செல்லாமல் இருக்கின்றனர்.

அத்தோடு, குறித்த 2 யுவதிகளும் தோட்டத்தில் தொழிலாளியாக தொழில் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap