க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவின் பின்னர் அவற்றிக்கு தடை விதிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளை நேற்று நள்ளிரவு முதல் முடிப்பதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நிலவும் பாதகமான நிலைமைகள் காரணமாக பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.