இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஒரு பில்லியன் டொலர் கடனை இந்திய ரூபாயில் செலுத்த இந்திய ரிசர்வ் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
வர்த்தக பரிவர்த்தனைகள், சமீபத்திய கடன் வசதி ஒப்பந்தத்தின் கீழ், ஆசிய க்ளியரிங் யூனியன் பொறிமு றைக்கு இணங்க இந்திய ரூபாயில் தீர்த்துவைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
பிராந்திய ஒத்துழைப்பை ஊக்குவிக்க ஆசிய மற்றும் பசிபிக்கிற்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் முன்முயற்சியில் 1974 ஆம் ஆண்டு ஆசிய கிளியரிங் யூனியன் நிறுவப்பட்டது.
க்ளியரிங் யூனியன் பலதரப்பு அடிப்படையில் தகுதியான பரிவர்த்தனைகளுக்கு உறுப்பு நாடுகளுக்கு இடையே பணம் செலுத்துவதற்கு உதவுகிறது.
இதன் மூலம் அந்நிய செலாவணி இருப்பு மற்றும் பரிமாற்ற செலவுகளை சிக்கனப்படுத்துகின்ற அதேவேளை பங்குபெறும் நாடுகளிடையே வர்த்தகத்தை மேம்படுத்துகிறது.