மிர்பூரில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றும் நோக்குடன் இலங்கை அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
141 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பங்களாதேஷ் அணி நான்காம் நாள் ஆட்ட நேரமுடிவில் 4 விக்கெட்களை இழந்து 34 ஓட்டங்களை பெற்றுள்ளது.
அசித பெர்னாண்டோ இலங்கை அணி சார்பாக சிறப்பாக பந்துவீசி தமிம் இக்பால் மற்றும் மஹ்முதுல் ஹசன் ஜாய் ஆகியோரின் இரண்டு விக்கெட்களையும் சாய்க்க வலுவான நிலையை இலங்கை அடைந்தது.
பின்னர் தமிம் மற்றும் ஹசன் ஆட்டமிழப்பிற்கு பின்னர், பங்களாதேஷ் அணி, நஜ்முல் ஹுசைன் சாண்டோ மற்றும் அணித்தலைவர் மொமினுல் ஹக் ஆகியோரின் விக்கெட்டுகளையும் இழந்தது.
முன்னதாக, ஏஞ்சலோ மத்யூஸ் ஆட்டமிழக்காமல் 145 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இதேவேளை தினேஷ் சந்திமால் 124 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க இலங்கை அணி 506 ஓட்டங்களை குவித்து.