அலரிமாளிகைக்கு வெளியே அமைக்கப்பட்ட கூடாரங்கள் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய போராட்டக்காரர்களினால் சற்றுமுன்னர் அகற்றப்பட்டன.
அலரிமாளிகைக்கு முன்பாக மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து கொட்டகைகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அத்தோடு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போராட்டங்கள் தொடரலாம் என நீதிமன்ற உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.