தங்காலையில் உள்ள டி.ஏ.ராஜபக்ஷவின் சிலை இன்று செவ்வாய்க்கிழமை ஒரு சிலரினால் தகர்த்தெறியப்பட்டது.
அவர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் தந்தை ஆவார்.
கொழும்பில் நேற்றைய தினம் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனை அடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் நாடளாவிய ரீதியில் ஆளும்தரப்பு எம்.பி.களின் வீடுகள், சொத்துக்களை அழித்து வருகின்றனர்.
நாளை வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போதிலும் இன்று டி.ஏ.ராஜபக்ஷவின் சிலை உடைக்கப்பட்டுள்ளது.